புல்வாமா:

புல்வாமா தாக்குல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பயங்கரவாதி அடில்அகமதுவின் பெற்றோர், இதுபோன்ற செயல்களுக்கு காரணம்  அரசியல்வாதிகள் என்று கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

லகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புல்வாமா தற்கொலை பயங்கரவாதி தாக்குதலில் 2 தமிழர்கள் உள்பட 44 பேர் பலியானார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தய அடில் அகமது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவனுக்கு எப்படி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடில் அமகது பயங்கரவாத இயக்கத்தில் சேர அரசியல்வாதிகளே காரணம் என அவனது பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

குலாம் ஹசன் – (பயங்கரவாதி அடில் அகமதுவின் தந்தை)

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று முன்தினம் (14ந்தேதி) மாலை  சென்று கொண் டிருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை பயங்கரவாதி  குண்டு நிரப்பிய காருடன் வந்து மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த கொடூர வெடிவிபத்தில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும்,  20 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலை நிறைவேற்றிய பயங்கரவாத அடில்அகமது ஜெய்ஷ்இ முகமது  பயங்கரவாத அமைப்பின் சி பிரிவைச் சேர்ந்தவன் என பொலீசார் தெரிவித்து உள்ளனர்.

உள்ளூர் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, அவர்களை தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்துவதை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடந்து செய்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டான். இவனைப் போல உள்ளூரைச் சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு, தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக பொலிசார் கூறியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் அடில் அகமது தர் என்ற இளைஞர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடில்அகமது குறித்து அவரது பெற்றோர்கள் கூறுவது என்ன?

இந்த தாக்குதல் குறித்து அடில் அமகதுவின் தாயும், தந்தையும் பெரிதும் துயரம் அடைந்துள்ளனர். அவனது தகப்பனார் குலாம் ஹசன் தார் அந்த பகுதியில்  சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அடில் அகமதுவின் தாயார் ஃபஹ்மீதா (Fahmeeda).

அடில்குறித்து கூறும் அவரது பெற்றோர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  அடில் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபோது  இந்தியத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாகவும், அதுவே அவனது கோபத்திற்கு காரணமானது.. அவன் இந்திய துருப்புகளுக்கு எதிராக மாற வழிவகுத்தது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அடில் அகமது ஜம்மு காஷ்மீரின்  லெத்திப்புரா பகுதியைச் சேர்ந்தவன், இந்த பகுதி தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது. பிளஸ்2 வரை  படித்துக் கொண்டிருந்த அடில் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, அருகிலிக்கும் மில் ஒன்றிற்கு வேலை சென்று வந்துள்ளார்.

அவரது  உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதன் மூலம் இவனுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து பயங்கரவாத குழுக்களுடனான நெருக்கத்தின் காரணமாக. அவனை  பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து மூளைசலவை செய்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென காணாமல் போன அடில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ- முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெற்றுள்ளான். அவனை தற்கொலை தாக்குதலுக்கு தயார் படுத்தியுள்ளனர். தயாராகிக் கொண்டிருந்த போதே, அவன் பெரிய தாக்குதல் ஒன்றிற்காக காத்து கொண்டிருந்துள்ளான்.

ஆனால், அடில் இதுபோல ஒரு கொடூரமான தாக்குதலில் ஈடுபடுவான் என்று தங்களக்கு தெரியாது என்று மறுத்துள்ளவர்கள்,  கடந்த ஆண்டு மார்ச் 19 ம் தேதி அடில் பணிக்கு சென்றவன் வீடு திரும்பவில்லை… நாங்கள் மூன்று மாதங்கள் அவனை தேடினோம் ஆனால், அவன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் தெரியவில்லை என்றும் கூறி உள்ளனர்.

கடைசியாக அவன் இருந்த இடம் தெரிய வந்தது. அவரை வீட்டிற்கு அழைத்து வர முயற்சிகள் எடுத்தோம் என்று கூறி உள்ளனர்.

தனது மகனின் மரணத்துக்கு  அரசியல்வாதிகளே காரணம் என்று குற்றம் சாட்டும் அடில் அமகது தந்தை குலாம் ஹசன் தார  , “பேச்சுவார்த்தை மூலம் அவர்கள் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இன்றைய  இளைஞர்கள் போர்க்குணம் கொண்டவர்கள், இதுபோன்ற தாக்குதல்களில்,  இந்திய துருப்புக்கள் மட்டுமல்லாது,  எங்களுடைய மகன்கள், சாதாரண மனிதர்களின் குழந்தைகளும்   இறக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

காஷ்மீரில் பிரிவினைவாத போராளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால்,  பாகிஸ்தானின்  முஸ்லீம் மக்களுக்கு அரசியல் ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளது என்று கூறி உள்ளார்.