ஜம்மு:

புல்வாமா தாக்குதல் காரணமாக மற்ற மாநிலங்களில் வசித்து வரும் காஷ்மீர் மாநில மக்கள் மற்றும், வெளிமாநிலங்களில் படித்து வரும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலை  தொடர்ந்து, நாடு முழுவதும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. வெளி மாநிலங்களில் படித்து வரும் காஷ்மீர் மாநில மாணவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற  நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று   உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள ஜம்மு – காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், காஷ்மீர் மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க nவண்டும் என்று என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும். மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.