ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலை  தொடர்ந்து, நாடு முழுவதும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புல்வாமாவில் நடைபெற்ற  பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல்சிதறி பலியானார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் காஷ்மீர் மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

தொழில் நிமித்தமாக வெளி மாநிலங்களில் வசித்து வரும் காஷ்மீர் மக்கள், மற்றும் வெளிமாநில கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்டை மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த வர்கள் மீது தாக்குதல் நடைபெறாத வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தாக்குதல்களை உடனே நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.