பிரிஸ்பேன்: பொறுமையாக ஆடி, இந்திய அணியின் தூணாக இருந்த புஜாரா, 56 ரன்கள் அடித்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
தற்போதைய நிலையில், இந்திய அணி 228 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
மொத்தம் 211 பந்துகளை சந்தித்த புஜாரா 56 ரன்களை அடித்தார். ரிஷப் பன்ட் 84 பந்துகளில் 34 ரன்களை அடித்துள்ளார். தற்போது மயங்க் அகர்வால் களமிறங்கியுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமெனில், 19 ஓவர்களில் 96 ரன்கள் எடுக்க வேண்டும்.