புதுகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, இன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கபடுகிறது. இந்த் விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 29-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அரசு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.