சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் செயலாளராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான பணி ஆணையை டிஎன்பிஎஸ் சேர்மன் கா.பாலசந்திரன் ஐஏஎஸ்  வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பல மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அப்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியும் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், உமா மகேஸ்வரி ஐஏஎஸ், தமிழ்நாடு அரசு பணியாளர் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.