புதுக்கோட்டை: ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பிழியும் இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் நடந்தேறியுள்ளது.
தமிழகம் முழுவதும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. நேற்றுகூட சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதுபோல, திருச்சி அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகள் தண்ணீரால் மூழ்கின. இந்த நலையில், புதுக்கோட்டை பகுதியில உள்ள தொடையூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கம் தண்ணீரிலால் மூழ்கியது.
இதை கவனிக்காமல், காரில் அவ்வழியாக பெண் மருத்துவர் சத்யா ரயில்வே பாலத்திற்குள் காரை ஓட்டிச்சென்றுள்ளார். அவருடன் அவரது மாமியாரும் இருந்துள்ளார். ஆனால், கார் முக்கால்வாசி அளவுக்கு மூழ்கியதால், ஆஃப் ஆனது. இதையடுத்து, அவர் காரின் டோரை திறந்து கொண்டு வெளி வர முயற்சி செய்தார். மருத்துவர் சத்யா சீட் பெல்ட்டும் அணிந்திருந்ததால், அவரால் உடனடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் காருக்குள் தண்ணீர் புகுந்தால், அவர் மயக்கமானார். ஆனால், அவரது மாமியார் காரின் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து வெளியேறியதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அக்கம் பக்கத்தினர் விரைந்த வந்து மருத்துவரை மீட்டனர். ஆனால், மருத்துவர் சத்யா காரிலிருந்தபடியே, பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம மக்கள் தரைப்பாலத்தை மேம்பாலமான மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.