புதுச்சேரி:
புதுவை மாநில 15வது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெறும் விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல்வர் என். ரங்கசாமி மற்றும் எம்எல்ஏ-க்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த க. லட்சுமி நாராயணன், தேனி சி. ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜகவைச் சேர்ந்த ஏ. நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணகுமார் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். புதுச்சேரியில் இதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel