புதுச்சேரி,

ம்பள பாக்கி காரணமாக புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களின்  வேலை நிறுத்த போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது.

இதன் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்கு வரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில்  நிதி பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு முழுமையான  சம்பளம்  வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நிரந்தர ஊழியர்கள் சிலருக்கு மட்டுமே சம்பளம் போடப்பட்டுள்ளதாகவும், இதிலும் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் 1ந்தேதி வழங்க வேண்டிய சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பஸ்களை இயக்க மறத்து வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று 3வது நாளாக தொடருகிறது. இதன் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் பெரும்  அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.