புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபைக்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் எதிர்ப்பு தெரிவிததனர்.

புதுச்சேரி சட்டசபையில் உரையாற்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டமன்றத்துக்கு வருகை புரிந்தார்.

சபாநாயகர் மற்றும் முதல்வர் ஆளுநரை வரவேற்றனர். ஆளுநருக்கு  “Guard of honour” காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், அசானா, வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரும் கருப்பு சட்டையில் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களுக்கு முதல்வர்  நாராயணசாமி கைகொடுத்து வரவேற்றார்.

ஆளுநர் உரை வாசிக்க தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.  தொடர்ந்து ஆளுநரை நோக்கி முன்னேறினர். அவர்களை சபை காவலர்கள் தடுத்த்னர்.

அதைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டசபை வெளியே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது,  ஆளுநர் கிரண்பேடி மாநில வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறார் என்றும், மக்களிடையே  மலிவான  விளம்பரம் தேடிவருகிறார்,  மக்கள் பிரதிநிகளை தொடர்ந்து அவமதித்து வருகின்றார்  என்று குற்றம் சாட்டினர்.

மேலும்,  கிரண்பேடிக்கு சட்டசபைக்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்து அவைக்குள் அமைதியாக இருக்கும்
காங்கிரஸ் கட்சியை கண்டித்தும்  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்ததாக கூறினார்.