புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்ற சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார்.
புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் இருக்கிறது.
அங்கு கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுகாதார மற்றும் சிகிச்சை வசதிகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த கழிவறையை பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடையுடன் சுத்தம் செய்தார். அவர் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது, மருத்துவமனையை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய படியே செய்கிறார்.