புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
அதிக அளவில் பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரண்டாவதாகத் தமிழகத்திலும் உள்ளன.
புதுச்சேரியில் இன்று 5 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 104 ஆகி உள்ளது.
இங்கு கொரோனாவால் இதுவரை உயிர் இழப்பு ஏதும் நிகழவில்லை.
இதுவரை இங்கு 43 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel