புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நக்கீரன் இதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கிறது .
தமிழகம் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தில் வரும் 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. தமிழக தேர்தல் முடிவு குறித்து பல்வேறு கருத்துக்கணிப்புகள் புதுவை யூனியன் சட்டபேரவை தேர்தல் குறித்தும் வெளியாகிறது.
நக்கீரன் இதழ் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பு முடிவு காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அரியாங்குப்பம், உழவர்கரை, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, பாகூர், திருபுவனை, காமராஜ்நகர், மணவெளி, வில்லியனூர், ஏம்பலம், உருளையன்பேட்டை, நிரவி-திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு, திருநள்ளாறு, நெடுங்காடு-கோட்டுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
மங்கலம், முத்தியால்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.
மண்ணடிப்பட்டு, ஊசுடு, கதிர்காமம், லாஸ்பேட்டை, இந்திராநகர், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும்.
காரைக்கால் தெற்கு, ராஜ்பவன் தொகுதிகளில், இழுபறி நிலை உள்ளது.
நிலையில் உள்ளது. மாஹே, ஏனம் ஆகிய இரு தொகுதிகளில் சர்வே மேற்கொள்ளப்படவில்லை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகள் உள்ளன. சர்வே எடுக்கப்பட்ட 28 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று நக்கீரன் இதழ் சர்வே தெரிவிக்கிறது.