புதுச்சேரி
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சென்னையில் இருந்து வருவோரிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 1982 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை சென்னையில் 28,924 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு 294 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 14723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரிக்கு சென்னையில் இருந்து வருவோரால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே சென்னை மக்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கொரோனா தொற்று உள்ளோரிடம் இருந்து இல்லாதோருக்குப் பரவும் என்பதால் புதுச்சேரி மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வருவோருக்குப் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.