புதுவை முதல்வர் ரங்கசாமியின் தனிச்செயலாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்று காலை உயிரிழந்தார்.
புதுச்சேரி மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அரிமா (34) புதுவை முதல்வரின் உதவி தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த வாரம் சொந்த வேலை காரணமாக சின்ன காலாப்பட்டு ஈ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழ் அரிமா-வுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.