புதுச்சேரி: பாம் ரவி, அவரது நண்பரை வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி மாநில பாஜக இளைஞர்ணி செயலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (வயது 33). இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. இவர் கடந்த கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வாணரப்பேட்டையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், இருவரும் கீழே விழுந்து காயங்களுடன் ஓடிய நிலையில் கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கூலிப்படையை வைத்து இந்த கொலை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையை செய்ய தூண்டியதாக பாஜக மாநில இளைஞரணி செயலர் விக்கி என்ற விக்னேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய காவல்துறையினர், ஏற்கனவே சிறையில் உள்ள தாதா மணிகண்டனுக்கும் பாம் ரவிக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், இதையடுத்து தாதா மணிகண்டனுக்கும் உதவும் வகையில், புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து , புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி செயலரான வாணரப்பேட்டையைச் சேர்ந்த விக்கியை போலிசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.