புதுச்சேரி: புதுச்சேரியில், இதுவரை எந்தவொரு அமைச்சரும் நியமிக்கப்படாத நிலையில், வரும் 16-ந்தேதி புதுவை சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அன்றைய தினம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையிலான இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில்  உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர்காங்கிரஸ் கட்சி  10 இடங்களையும், பா.ஜ.க. 6  இடங்களையும் கைப்பற்றி இருந்தது. இ,தையடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கடந்த மே மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் ்தலைவர் ரங்கசாமி  முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால், அமைச்சர்கள் நியமிப்பதில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்ததால், அமைச்சர்கள் பதவி ஏற்கவில்லை. இந்த இழுபறி ஒரு மாதத்தை கடந்தும் நீடித்து வருகிறது.  இதற்கிடையில், மத்தியஅரசு பாஜகவுக்கு ஆதரவாக 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்தது.  இதனால் பாஜக பலம் 9 ஆக உயர்ந்தால், அங்கு இரு கட்சிகள் இடையே ஆடுபுலி ஆட்டம்  நீடித்து வந்தது.

இந்த நிலையில், பாஜகவுக்கு  சபாநாயகர் பதவி மற்றும்  2 அமைச்சர்கள் பதவி முதல்வர்  ரங்கசாமி சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.   இதை பா.ஜ.க.  ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, முதலில் சட்டசபையை கூட்டி சபாநாயகர் தேர்வு  தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கையை புதுவை அரசு மேற்கொண்டது. இதை கவர்னர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறத. இதையடுத்து,  வரும் 16-ந்தேதி (புதன் கிழமை) சட்டசபை கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அன்றைய தினம் சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என தெரிறிது. அதையடுத்தே, அமைச்சர்கள் பதவி ஏற்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.