சென்னை,

திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக இதுவரை டிடிவிக்கு ஆதரவு தெரிவித்து வந்த புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

தினகரன் அணியை சேர்ந்த புதுச்சேரி எம்எல்ஏக்கள் நான்கு பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்..!

புதுச்சேரியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் பாஸ்கரன், அன்பழகன், வையாபுரி,  ஹஸன்னா ஆகிய நான்கு பேரும் இதுவரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தங்களது ஆதரவை அளிக்கப் போவதாக எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.