ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிடவேண்டும்: மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

டெல்லி:

ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொது தளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த அதிகாரிகள் பெயரை பொது தளத்தில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை வெளியிடவும் வேண்டும். இந்த உத்தரவு அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


English Summary
Publish the list of corrupt officials immediately! Information Commission to the Central Government