சென்னை

பொதுமக்கள் 2025 புத்தாண்டை சிறப்புடன் வரவேற்றுள்ள்னர்.

உலகெங்கும் 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அவ்வரிசையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது., சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். என்பதால் இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர்..

சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை பூத்கள் அமைக்கப்பட்டு மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னை காமராஜர் சாலையில், புத்தாண்டை வரவேற்க வண்ண விளக்குகளால் மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அதிகளவில் மக்கள் புத்தாண்டை வரவேற்பதற்காக வந்து இருந்தனர். சென்னையில் 19 ஆயிரம் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக கடற்கரைகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இரவு 7 மணிக்கு பிறகு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மெரினாவில் புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு காமராஜர் சாலையில் நடந்தே வந்தனர். காமராஜர் சாலையில் காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகே மணிகூண்டு இருந்த பகுதி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் இரவு 8 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் இனிப்புகளையும் வழங்கி வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்றனர்., விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். சென்னையில் உள்ள கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.