பனாஜி
வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் கோவாவில் அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோவாவில் தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டுப் பறக்கும் படையினர் அம்மாநிலம் எங்கும் கடுமையாகக் கண்காணிப்பு நடத்தி வருகின்றனர்.
கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் முழுமையாகப் பதிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 14 அன்று அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.