சென்னை:

மிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும்  7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் 2வது  கட்டமாக ஏப்.18-ம் தேதி அன்று  தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. தேர்தல்பிரசாரமும் அனல் பறக்கிறது.

இந்தநிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில்பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.