தஞ்சை
நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியதில் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு சென்றுள்ளார் அவர் முதலில் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு அவர் தண்ணீர் திறந்து விட்டார். அதன்படி காவிரியில் 40 ஷட்டர்கள், வெண்ணாற்றில் 33, கொள்ளிடத்தில் 30, கல்லணைக்கால்வாயில் 6, மணற்போக்கியில் 5, கோவிலடி மற்றும் பிள்ளைவாய்க்காலில் தலா ஒரு ஷட்டர்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.
முதல்சர் கல்லணை சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு நடத்தியபோது டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள், சாகுபடி விவரங்களை கேட்டறிந்ததோடு, தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய இடுபொருட்களான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார்.
பிறகு டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தண்ணீர் திறந்துவிட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கைகள் குறித்த மனுவையும் வழங்கினர். அதன் பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்தித்தபோது சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தி.மு.க.வினரும், பொதுமக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் அவர்கள் கொடுத்த மனுக்களையும் பெற்று கொண்டார். மாணவ, மாணவிகள் பலர் கைகுலுக்கவும், ‘செல்பி’ எடுக்கவும் ஆர்வப்பட்டதால் மக்க்ளின் ஆர்வத்தை பார்த்த மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்ததுடன், ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார். சிறுமி ஒருத்து தஞ்சை ரயிலடி பகுதியில் நின்று பூவை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்ததை பார்த்த முதல்வர் நேராக சென்று அந்த சிறுமியிடம் இருந்து பூவை மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.
காந்திஜி சாலையில் நடந்தே சென்று சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். சாலையோரம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் தாங்கள் பெற்ற பரிசுகளுடன் சாலையோரம் காத்திருந்ததை பார்த்த மு.க.ஸ்டாலின் பரிசுகளை பார்வையிட்டு, வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா, மேரீஸ்கார்னர், ரெயிலடி, காந்திஜிசாலை வழியாக 2¼ கி.மீ. தூரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ சென்று மக்களை சந்தித்தார்’