
டில்லி
பணமதிப்பீட்டுக் குறைப்பு நடவடிக்கை குறித்து மக்கள் கருத்தை அறிய மோடி அறிவித்த செயலியில் மக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கறுப்புப் பண ஒழிப்புக்காக ரூ 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து ஓராண்டு முடிந்துள்ளது. இது பற்றி மக்களின் கருத்தை அறிய பிரதமர் மோடி NM என்னும் மொபைல் ஆப் (செயலி) ஒன்றை நிறுவி இருந்தார்.
அந்த செயலியில் 24 மணி நேரத்தில் 50000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் 81% பேர் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதிக பட்சமாக உள்ள ஐந்து பாயிண்டுகளில் 4.6 பாயிண்டுகள் ஆதரவாக கிடைத்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel