சென்னை,

ரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 படிப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே 10வது மற்றும் 12வது வகுப்பு மற்றும் பொதுத்தேர்வு நடைபெற்று வருவது வழக்கம். ஆனால், தற்போது நீட் தேர்வு போன்ற பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள செய்யும் வகையில் பிளஸ்1க்கும் பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பொதுவாக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பிளஸ்1க்கான பாடம் நடத்தாமலே, அந்த வருடத்திலும்  பிளஸ்2 பாடங்களயே நடத்தி வருகின்றனர்.

இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் பிளஸ்1க்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து இருப்பது தனியார் பள்ளிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.