மதுரை: மதுரை அருகே புளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியவருக்கு பாட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரின் கெட்போன் வெடித்து அவரது காது கிளிந்து செவிடானது. இதையடுத்து, அவர் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக 5ஜி அலைக்கற்றை சேவைகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை வலுத்து வருகிறது.
நவின டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக, இன்று சாமானிய மக்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்போன் மூலமே கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது அனைவரும், 24மணி நேரமும் போனே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும், பலர், 24மணி நேரமும், இயர் பாட்ஸ், ப்ளூடூத் ஹெட்போன் போன்றவற்றை பயன்படுத்தி பாட்டு கேட்பதும், பேசுவதுமாக இருந்து வருகின்றனர். இது உடல்நலக்கேடு என்று கூறினாலும், அதை கண்டுகொள்ளாத நிலையே தொடர்கிறது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 55வயருது விவசாயி ஒருவர் புளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். அப்போது, அவரது காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்து சிதறியது. . இதனால் அவருக்கு காதின் ஒரு பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியதுடன், காதினுள்ளும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல ஆராய்ச்சி முடிவுகள் புளுடூத் ஹெட்செட், ஏர்பாட்ஸ் போன்றவற்றால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளன. செல்போன்றகள் அதிக அளவில் உபயேகாப்படுத்துவதால், புற்றுநோய், காதுகேட்காமை, காதில் சீழ்வடிதல், கவச்சிதறல், ஒற்றை தலைவலி, கண்களில் குறைபாடுகள் என பல்வேறு உடல் உபாதைகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இருந்தாலும் மக்களிடையே அதிகரித்து வரும் மோகம் காரணமாக, செல்போன்களால் ஏற்படும் விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில வருடங்களாகவே வயர்லெஸ் ஹெட்செட்ஸ் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. புளூடூத் ஹெட்செட்ஸ்களான அவற்றை, ஏர்-பாட்ஸ் (Air pods) வகைகளில் உபயோகப்படுத்த பலர் விரும்புகின்றனர். புளுடூத் ஹெட் செட் இருந்தால், அதை செல்போனோடு அதை மாட்டிக்கொண்டே இருக்க வேண்டாமென்பதால், பலரும் இதற்கு முன்னுரிமை கொடுத்து வாங்குகிறார்கள். குறிப்பாக ஏர்-பாட் ஹெட்செட் எனில் அது அளவில் சின்னதாக இருப்பதால் மறதியில் அதை எங்காவது வைத்துவிட்டு பின் தொலைத்துவிடுவோம் என நினைத்து அதை காதிலேயே மாட்டியிருக்கின்றனர். இப்படி காதிலிருந்து ஹெட்செட்டை கழற்றாமலேயே இருந்தால், காது கேட்கும் திறமை விரைவில் பாதிப்புக்குள்ளாகும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றனர்.
ஒருவர் தொடர்ந்து, சில மணி நேரம் காதிற்குள் ஹெட்போன் அல்லது இயர்பாட்களை பொருத்தி உபயோகப்படுத்தி வந்தால், அவர்களின் கேட்கும் திறன் விரைவில் செயலிழந்து விடுவதுடன், மேலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தொடர்ந்து இயர்பாட்ஸ் உபயோகப்படுத்துபவர்களின் காதிலிருந்து மெழுகு போல ஏதேனும் திரவம் வெளிவருவதை நம்மால் உணர முடியும். இப்படி வெளியேறும் திரவத்தை காணும்போது, இதனால் காதுகளுக்கோ செவித்திறனுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா – எதனால் இப்படி வருகிறது என்றெல்லாம் நம்மில் பலருக்கும் சந்தேகம் எழும்; ஐயமும் எழும். ஆனாலும்கூட அடுத்தடுத்த முறைகளில் மீண்டும் மீண்டும் அதை உபயோகப்படுத்தவே செய்து வருகிறோம். ஆனால் இதன் பாதிப்பு எங்கே செல்லும் என்பது குறித்து யாரும் கிஞ்சித்தும் கவலைகொள்வது இல்லை.
ஹெட்செட் பயனாளர்கள் தொடர்ந்து காதிலேயே இயர்பாட்ஸை வைத்திருப்பதால், சுவாசப்பிரச்னைகள் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளது. . காதென்பது, மூக்கு மற்றும் தொண்டைக்கு நெருங்கிய தொடர்புடைய இரு துவாரங்கள் கொண்ட ஒரு பகுதி. அதனால், அந்த காது வழியாகவும் சுவாசத்தின் பங்கு இருக்கும். காது முழுமையாக அடைபட்டு போகையில், அந்த சுவாச சுழற்சியில் மாறுதல்கள் உருவாகி சிக்கல்கள் உருவாகும்.
காது, தன்னால் சுவாசிக்க முடியாமல் போகும்போது மேற்குறிப்பிட்ட ஈரப்பசையை உள்ளுக்குள் சேர்த்து வைத்து பிரச்னையை உண்டாக்கும். இது மட்டுமன்றி பொதுவாக ஹெட்செட் அணிவோருக்கு, அதை அணிந்தபிறகு வெளிப்புற சத்தமானது சில டெசிபெல்கள் குறைந்தே கேட்கும். நீங்கள் ஹெட்செட் உபயோகிப்பவர் எனில், உங்களால் இதை புரிந்துக்கொள்ள முடியும். (ஹெட்செட் அணிந்துக்கொண்ட பின், நீங்கள் பாட்டே கேட்கவில்லை என்றாலும்கூட, உங்களுக்கு அருகிலிருந்து பேசுவோர் சற்று குரலை உயர்த்தி சத்தமாகவே பேசவேண்டியிருக்கும். அதையே வெளிப்புற சத்த டெசிபெல் குறைகிறது என்கிறார் மருத்துவர்.) தொடர்ச்சியாக இப்படி டெசிபெல் குறைந்துபேசம் நிலை உருவாகிறது. அதாவது, , உங்களுக்கு கேள்வித்திறன் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை உங்களால் உணர முடியாது; மாறாக உங்களுடன் இருப்பவர்களால்தான் உணரமுடியும்.
‘இயல்பான சத்தத்துக்கு அதிகமாக கூப்பிட்டால்தான் திரும்புகின்றீர்கள்; பக்கத்திலிருப்பவரிடம் பேசுகையில்கூட சத்தமாக பேசுகின்றீர்கள்’ என்றெல்லாம் சொல்லி அவர்கள் இதை குறிப்பிடுவர். 40, 50 வயதுவரை இப்படி இருந்தால், அதன்பின் காதில் கேட்கும் திறன் இயந்திரத்தை பயன்படுத்தியே பிரச்னையை சரிசெய்ய வெண்டிய நிலை உருவாகி வருவதாக எச்சரிக்கப்படுகிறது.
மேலும், காதிலேயே இயர்பாட்ஸை தொடர்ந்து வைத்து உபயோகித்து வருவதால், பலருக்கும் பல விதமான உடல் உபாதைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்னென்னெ சிக்கல்களை மக்கள் இப்போது சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வெளியான ஆய்வு தகவல்களில், தொடர்ந்து இயர்பாட்ஸ் பயன்படுத்துவதால், கேட்கும் திறனில் சிக்கல் ஏற்படுவதாகவும், சமீப காலமாக அதிகம் பேர் செவிதிறன் பாதிப்பு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இயர்பாட்ஸ்-ல் முழு வால்யூம் உடன் பாடல்களை கேட்பது, மற்றும் முழு பாஸ் உடன் ப்ளூடூத் இயர்பட்ஸ் மற்றும் இயர்போன்ஸ் சாதனங்களை பயன்படுத்துவது செவி திறனை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் மற்றும் நீண்ட காலத்திற்கு ஒலி அலைகள் செவி பாறையில் மோதுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல, தொடர்ந்து இயர்பாட்ஸை வைத்து உபயோகித்து வருவதால், நீங்காத ஒற்றை தலைவலி மற்றும் பொதுவான தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, நீண்ட நேரம் ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்துவதனால், அதில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் காரணமாக ஒற்றை தலைவலி மற்றும் நீங்காத பொதுவான முழு தலைவலி போன்ற சிக்கல்களை மக்கள் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, செல்போன்களில் இருந்து வெளியாகும் காந்த அலைகளால் , இருதய பாதிப்பும் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவலை ஆய்வுகள் தெரிவித்து உள்ளது. நாம் எல்லோரும் கொரோனா தடுப்பூசியால்தான மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம் உடன் இருந்தே நம்மை கொன்று வருவதில் முக்கிய பங்காற்றி வருவது செல்போன்ற என்பதை பலர் உணர மறுக்கின்றன.
காதுக்கும் இருதயத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தாலும் கூட, ப்ளூடூத் இயர்போன்ஸ் மூலம் நீங்கள் கேட்க்கும் ஒலியின் காரணமாக உங்கள் இருதயம் சில நேரங்களில் வேகமாக துடிக்கிறதாம். இதனால், நாளடைவில் இருதய கோளாறு ஏற்பட வாய்ப்புளள்து என்று கூறப்பட்டுள்ளது.
ஹெட்போன், இயர்பட்ஸ், இயர்போன்ஸ் போன்ற சாதனங்கள் காதுக்குள் நிகழும் காற்றோட்டத்தை துண்டிக்கின்றன என்பது உண்மையே. இதனால், காதுகளில் உள்ள காற்றுப்பாதை அடைக்கப்படுகிறது. இதனால், காதுக்குள் பாக்டீரியாவின் தாக்குதல் அதிகமாகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமா பல தொற்றுநோய்களுக்கு புளூடூத் பயனர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தற்போது மாணவர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்கள் என்று பலரும் இப்போது ஹெட்போன்ஸ் பயன்படுத்துகிறார்கள் இதனால், கவனச்சிதறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக வாகனம் ஓட்டும் பொழுது இப்போது பலர் ஹெட்போன்ஸ் அணிந்து செல்கிறார்கள். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பே ஏற்படுகிறது.
இத்தகைய காரணிகளால் மக்கள் தொடர்ந்து பல மணி நேரம் செல்போன் மற்றும் புளுடூத், இயர்பாட்ஸ் போன்ற சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏர்பாட் மற்றும் வயர்லெஸ் இயர்பட் உண்மைகள்
புளூடூத் ஹெட்செட்கள் மற்றும் இயர்போட்களைப் போலவே ஏர்போட்களும் மைக்ரோவேவ் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சின் (RFR) சிக்னல்களை உங்கள் காதுகளில் இருக்கும்போதே, நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் தொடர்ந்து அனுப்பும்.
ஏர்போட்கள் மற்றும் வயர்லெஸ் இயர்போன்கள் உங்கள் மண்டைக்கு அருகில் அமர்ந்திருக்கும். அவை உங்கள் மூளை மற்றும் காதுக்கு அடுத்ததாக RFR ஐ நேரடியாக அனுப்புகின்றன, மேலும் RFR உங்கள் மூளை மற்றும் காது திசுக்களில் உறிஞ்சப்படுகிறது.
ஆப்பிளின் இரண்டாம் தலைமுறை ஏர்போட்கள் புளூடூத் கிளாஸ் 1 ஆகும் – அதாவது அவை நூற்றுக்கணக்கான அடி தூரத்தை அடைந்து மற்ற புளூடூத் சாதனங்களுடன் ஒப்பிடும்போது அதிக கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இடது ஏர்போட் வலது ஏர்போடுடன் “அருகில் புல காந்த தூண்டல்” (NFMI) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கிறது. புலங்கள் உங்கள் மூளையாக இருந்தாலும் சரி. காந்தப்புலங்கள் புற்றுநோய் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
தீர்வு:
முடிந்தவரை ஸ்பீக்கர்ஃபோனை டேபிளில் வைத்துப் பயன்படுத்தவும் (உங்கள் பாக்கெட் அல்லது மடியில் அல்லது ப்ராவில் இல்லை). ஸ்பீக்கரைப் பயன்படுத்த முடியாதபோது ஏர்டியூப் ஹெட்செட்டைப் பயன்படுத்தவும். முடிந்தவரை, மொபைல் போன் அல்லது கம்பியில்லா தொலைபேசிக்குப் பதிலாக வழக்கமான கம்பியுடனான தொலைபேசியைப் பயன்படுத்தவும்.
3,500 க்கும் மேற்பட்ட மருத்துவ மருத்துவர்கள் 2020 ஆம் ஆண்டு ஒருமித்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர், வயர்லெஸ் RFR அரசாங்க வரம்புகளுக்குக் கீழே உள்ள தீவிரங்களில் உயிரியல் அமைப்புகளை சேதப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது மருத்துவ மருத்துவர்களின் பல கூடுதல் முறையீடுகள் பின்வருமாறு: சுற்றுச்சூழலுக்கான சர்வதேச டாக்டர்கள் சங்கம், சைப்ரஸ் மருத்துவ சங்கம், வியன்னா ஆஸ்திரிய மருத்துவ அறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான சைப்ரஸ் தேசியக் குழு, பெல்ஜியம் மருத்துவர்கள் மேல்முறையீடு, கனேடிய மருத்துவர்கள், சைப்ரஸ் மருத்துவ சங்கம், டுரின் மருத்துவர்கள், இத்தாலி, ஜெர்மன் மருத்துவர்களின் மேல்முறையீடு, பூமி மற்றும் விண்வெளியில் 5ஜியை நிறுத்த சர்வதேச அளவில் கோரிக்கை வலுத்து வருகிறது.