திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஆகிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீராவில் நடிக்கிறார் பிரபுதேவா.
இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகிறார் அமீரா தஸ்தர். தி ஜங்கிள் புக் என்ற பிரபல காமிக் கதையில் வரும் கறுஞ்சிறுத்தையின் பெயர் பஹீரா. அந்த சிறுத்தையை போல குணம் கொண்டவன் தான் இந்த படத்தில் நாயகன். அதனால் தான் பஹீரா என்ற பெயர் வைக்கப்பட்டது என பிரபுதேவா கூறியுள்ளார்.
‘பஹீரா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதை ‘கின்னஸ்’ பக்ரூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.
2 அடி 6 அங்குல உயரம் இருக்கும் பக்ரூ, உலகிலேயே ஒரு திரைப்படத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்த உயரம் குறைவான நடிகர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இதனால்தான் இவரது பெயர் ‘கின்னஸ்’ பக்ரூ என்று மாறியது.
பரதன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கணேசன் சங்கர் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் சைக்கோ ராஜா என்ற பாடல் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது பஹீரா பஹீரா சைக்கோ ராஜா நான் என ஜிவி.பிரகாஷ் குரலில் ஒலிக்கிறது.