மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி திரைக்கு வருகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம், பிரபு, ஜெயராமன், பிரகாஷ்ராஜ், ரகுமான், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் சோழா சோழா என்ற பாடல் இன்று வெளியானது.

ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் சிங்களாக பொன்னியின் நதி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.