சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்குகள் என்று தமிழகஅரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,  அரசோடு இணைந்து மக்களாகிய நாமும் இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் பலர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழக அரசு எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை, அரசோடு இணைந்து மக்களாகிய நாமும் இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்…

என கூறி உள்ளார்..