டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி பலியானார்.

அரியானா மாநிலத்தின் கோஹானா பகுதியில் வசித்து வந்தவர் அஜய் மூர்.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான திக்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று திறந்தவெளி பூங்காவில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கிய விவசாயிகளில் ஒருவர் உயிரிழந்து இருப்பது,  மற்ற விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.