மதுரை
பாலியல் தொந்தரவு வழக்கில் டிஜிபி ராஜேஷ் தாசைக் கைது செய்யப் போராடியவர்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விடுதலை செய்தது
பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்குச் சிறப்பு டிஜிபியாக பணி புரிந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. அதையொட்டி மேலும் பல பெண் காவல்துறையினர் அடுக்கடுக்காக ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிபி சிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு காரணமாக ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க ஆறு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு போராட்டம் நடத்திய 27 பேர் மீது தமிழக அரசு வழக்க்பு பதிந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்க விதித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த வழக்கை ரத்து செய்து 27 பேரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.