தேனி:
ரக்குறைவாக பேசும் தலைமை ஆசிரியை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கினர் கிராம மக்கள்.
இந்த பரபரப்பான சம்பவம், தேனி மாவட்டம், போடி அருகே கரட்டுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த பள்ளியில் சுமார் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியின்  தலைமை ஆசிரியையாக மகாலட்சுமி மற்றும் 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமை ஆசிரியை ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவ  -மாணவிகளை அடித்து காயப்படுத்துவதாக வும், இதன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறார்கள் என்று  கரட்டுப்பட்டி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
school
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அப்போது, தலைமை ஆசிரியையை இடம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். ஆனால், மாவட்ட கல்வி அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கரட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளியை முற்றுகை யிட்டனர்.
பள்ளிக்கு வந்த மாணவ , மாணவிகளை பள்ளிக்கு எதிரே உள்ள மரத்தடியில் அமர வைத்தனர். இதனால் தலைமை ஆசிரியை மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வாசலில் நின்றிருந்தனர்.
இதையறிந்த போடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாத்தை நடத்தினர்.
அதன்பின்னர் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து, தலைமை ஆசிரியை மகாலட்சுமி மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.