கோவை:

வானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக  கேரள எல்லையில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை எல்லையான எட்டிமடை பகுதியில் இந்த மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி அறு.

இந்த ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்ற பகுதியில்  தடுப்பணை கட்டி வருகிறது கேரள அரசு.

இதுகுறித்து மத்தியஅரசுக்கு பலமுறை நினைவூட்டியும் இதுவரை எந்தவிட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை தடுப்பணையின் 80 சதவீத பணி முடித்து விட்டது.

இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் கேரள அரசை கண்டித்து, கோவையை அடுத்த கேரள எல்லையான எட்டிமடையில் சாலை மறியலில் ஈடுபட, பெரியார் திராவிட கழக பொதுச்செய லாளர் அழைப்பு விடுத்திருந்தார்,.

அதனப்டி நேற்று அவர் தலைமையில் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பாலக்காடு பைபாஸ் ரோட்டில் உள்ள எட்டிமடையில் நேற்று குவிந்தனர்.

இந்த போராட்டத்துக்கு  திமுக, காங்கிரஸ், த.மா.கா, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க, கொங்கு ஜனநாயக கட்சி, ம.ம.க. மற்றும் 40 அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் கோவை-எட்டிமடை பைபாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, `பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழர் விரோத போக்கினை கேரள அரசு நிறுத்திகொள்ள வேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 1,600 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களை எட்டிமடை பகுதியில் உள்ள 3 திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். பின்பு மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.