டில்லி

ச்சநீதிமன்ற கொலிஜியம் ஜோசப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்க அளித்த சிபாரிசை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.

உச்சநீதிமன்ற கொலிஜியம் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தவர்களில் கே எம் ஜோசப்பும் ஒருவர் ஆவார்.  கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவியில் உள்ளார்.   கடந்த 2016ஆம் வருடம் நடந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்த வழக்கில் இவர் அதை ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத் தக்கது.

தற்போது மத்திய அரசு கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளது.   ஏற்கனவே கேரளாவை சேர்ந்த பலர் நீதிபதிகளாக இருப்பதாகவும் மேலும் தற்போது பெண் நீதிபதி ஒருவரை நியமிப்பதற்காக பரிந்துரையில் இவருக்கு அடுத்ததாக  இருந்த இந்து மல்கோத்ராவை மத்திய அரசு நீதிபதியாக நியமித்தது.

இது நீதித்துறையில் கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.   இதன் மூலம் மூப்பு உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.    சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று கூடி மத்திய அரசின் இந்த நிராகரிப்புக்கு எதிராக மனு ஒன்றை ஜனாதிபதிக்கு அளித்துள்ளனர்.

இந்து மல்கோத்ரா வின் பதவி ஏற்ப்பை நிறுத்தி வைக்குமாறு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அளித்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏற்க மறுத்து விட்டார்.   மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் உட்பட பலரும் ஜோசப்பை நீதிபதி ஆக்க மறுத்த மோடி அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.