சென்னை: திமுக அரசைக் கண்டித்து வருகிற 27-ம் தேதி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்த நிலையில்,   திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் பாஜக சார்பில் வருகிற 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை  வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக பாஜகவின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.