டெல்லி: நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? என பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் இழுத்தடிக்கும் செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
செபி அமைப்பின் தலைவி மாதவியை பாதுகாக்கும் திட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியா மீது அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அதானி, அம்பானி என பலர்மீது குற்றம் சாட்டிய இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கு சந்தை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியது.
அதாவது, ‘செபி’ தலைவரான மாதவி, அந்த பதவியில் இருந்துகொண்டே, வேறு சில முக்கிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பணியாற்றி, அதன் வாயிலாக ஆதாயம் அடைந்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவை அனைத்தையும் மாதவி மறுத்து வந்த நிலையில், மத்தியஅரசு இதுகுறித்து விசாரிக்க பார்லி., பொது கணக்கு குழுவுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, விசாரணைக்கு ஆஜராக மாதவிக்கு பார்லி பொது கணக்கு குழு சம்மன் அனுப்பியது.
காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான கே.சி.வேணுகோபால் தலைமையிலான பார்லிமென்ட் பொது கணக்கு குழு, ‘செபி அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு’ என்ற தலைப்பில், அதன் தலைவர் என்ற முறையில், சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத மாதவி, தான் டெல்லி வர முடியாத நிலையில் இருப்பதாக காலை 9.30 -மணிக்கு தன்னிடம் மாதவி புச் தெரிவித்ததாக குழு தலைவர் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பாரில் பொதுக்கணக்கு கூட்டம், மாதவியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கூட்டம் மற்றொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘ பா.ஜ., – எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வாக்குவாதம் நடைபெற்றது. ஏற்கனவே இதுபோல மாதவி முன்பு ஒருமறையும் விலக்கு கேட்ட நிலையில், அவரது கோரிக்கை செய்யப்பட்டது.
இது குறித்து சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், ‘ பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) முன் கேள்விகளுக்கு பதிலளிக்க மாதவி புஜ் ஏன் தயங்குகிறார்? அவரை பாதுகாக்கும் திட்டத்தின் பின்னணியில் இருப்பது யார்? இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.