உலகின் பல பகுதிகளில், கொரோனா தடுப்பு மருந்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது என்று கூறப்படும் நிலையில், பிரிட்டனில், தடுப்பு மருந்து விநியோக மையங்களே அமைக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், அந்நாட்டு மக்கள்தொகையில், எந்தெந்த வயதினர், எப்போது அதைப் பெறுவார்கள் என்ற தோராய கணக்கீடு வெளியாகியுள்ளது.
அவற்றின் விபரம்;
* வீட்டு மருத்துவ கவனிப்பு பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரப் பணியாளரகள் – டிசம்பர் துவக்கம் முதல்…
* 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் – டிசம்பர் மத்தியிலிருந்து…
* 70 முதல் 80 வயதிற்கு இடைபட்டவர்கள் – டிசம்பர் இறுதியில்…
* 65 முதல் 70 வயதிற்கு இடைபட்டவர்கள் – ஜனவரி துவக்கம் முதல்…
* 65 வயதிற்குள் இருக்கும் அதிக ஆபத்து உடையவர்கள் – ஜனவரி துவக்கம் முதல்…
* 50 முதல் 65 வயதிற்கு இடைபட்டவர்கள் – ஜனவரி மத்தியிலிருந்து…
* 18 முதல் 50 வயதிற்கு இடைபட்டவர்கள் – ஜனவரி பிற்பகுதியிலிருந்து என்று கூறப்பட்டாலும், இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு தடுப்பு மருந்து, மார்ச் மாதத்திலேயே சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.