வாக்குறுதி சக்கரவர்த்தி – கவிஞர் ராஜ்குமார் மாதவன்
தேர்தல் தான் வந்தாச்சு
கூட்டணி தான் அமைச்சாச்சு
வேட்பாளரும் கிடைச்சாச்சு
சின்னங்களும் வரஞ்சாச்சு
புது வாக்குறுதியும் தந்தாச்சு
பழைய வாக்குறுதி என்னாச்சு ?
ஏழை இந்தியன்
ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம்
வரவு வைப்பதாக சொன்னாங்க -அதுக்காக,
வங்கி கணக்கு தொறந்து
வருஷம் ஆறு ஆச்சு!
கணக்கில் குறைந்த
வைப்பு நிதியின்னு
இருந்தப்பணம் தொலைச்சோமுங்க !
மானியத்தில் கிடைச்ச எரிவாய்வு
உள்ள விலையில் வாங்க சொன்னாங்க
மானியமெல்லாம் வங்கி வந்து சேருமினாங்க
எரிவாய்வு உருள விலை பத்து நூற தொட்டாச்சு
மானியம் மட்டும் எந்த திசையிலும் தெரியலீங்க
கருப்பு பணம் ஒழிக்கவல்ல சட்டமினாங்க
லஞ்சம் எல்லாம் ஒழிஞ்சு ஓடுமினாங்க
நாடு நல்லா வளம் செழிக்குமினாங்க
அம்பது நாள் பொறுக்க சொன்னாங்க
அஞ்சு வருஷம் பொறுத்தும், மாற்றமிலீங்க !
அம்பத்தாறு இன்ச்சு மார்பு வேணுமின்னாங்க
எதிரிய ஓட விட்டு அடிபோமினாங்க
சீனன் உள்ளவந்து செஞ்சே விட்டாங்க
ராணுவத்தில் இருவதுபேர் செத்தேவிட்டாங்க
வீரம் எல்லாம் வாய்ச்சொல்லில் தானுங்க
செய்கை என்று வந்துவிட்டால் காகித கத்திதானுங்க !
இப்ப அஞ்சு ட்ரில்லியன் பொருளாதாரம்
கனா காண சொன்னாங்க
வண்டியில் வருதே வளமும் நலமுமினாங்க
இரைட்டை இலக்கு வளர்ச்சியினாங்க- ஆனா
வளர்ச்சியெல்லாம் தலைகுப்புற படுத்தே போச்சுதுங்க !
தேர்தல் தான் வந்தாச்சு
கூட்டணி தான் அமைச்சாச்சு
வேட்பாளரும் கிடைச்சாச்சு
சின்னங்களும் வரஞ்சாச்சு
புது வாக்குறுதியும் தந்தாச்சு
பழைய வாக்குறுதி என்னாச்சு ?