உதகை:

நீலகிரி மாவட்டத்தில் PaperBoat நிறுவன குளிர்பானம் விற்பனை செய்யத் தடை செய்யப்படு வதாக  என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்,  PaperBoat  என்ற நிறுவனத்தின் குளிர்பானங்கள் அடைக்கப்பட்டுள்ள பாக்கெட்டில் உட்புறமும், வெளிப்புறமும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவதால், அதன் விற்பனைக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

சுற்றுச்சூழல் துறையினர் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, PaperBoat நிறுவனத்தின்  குளிர்பானத்தை வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட   ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.