சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமன ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து மதுரை துணைவேந்த பணியிடம் காலியாக இருந்து வந்தது. தொடர்ந்து,  புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது துணைவேந்தர் தேர்வு பணிகள் நடைபெற்று வந்தனர்.

இதையடுத்து, தேடல் குழுகூவினர், 3 பேர் கொண்ட பட்டியலை துணைவேந்தருக்காக பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பித்த னர். இதைத்தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.

பேராசிரியர் குமார்  சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்து உத்தரவிட்டுள்ளளார். ஆசிரிய பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமார், 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.