நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தின் இந்தி பட டப்பிங் உரிமையை இரண்டு பேருக்கு விற்பனை செய்து ஏமாற்றி உள்ளார் படத்தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்
கடந்த 2003ம் ஆண்டு தனுஷ், சாயாசிங் ஜோடிய நடித்து வெளிவந்த படம் திருடா திருடி. இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை நடிகர் யூகி சேது வாங்கி உள்ளார். ஆனால், அவர் அந்த படத்தை இதுவரை இந்தியில் மொழி மாற்றம் செய்யவில்லை.
இதையறிந்த படத்தின் தயாரிப்பாளர், புரொடக்ஷன்ஸ் எஸ்.கே.கிருஷ்ணகாந்த், திருடா திருடி படத்தின் டப்பிங் உரிமையை 2016ம் ஆண்டுமும்பையை சேர்ந்த கோல்ட் மையின்’ நிறுவனத்துக்கு திருட்டுத்தனமாக மீண்டும் விற்பனை செய்துள்ளார்.
என்னும் நிறுவனத்திற்கு மீண்டும் இரண்டாவது முறையாக யூகி சேதுவை ஏமாற்றும் விதமாக விற்பனை செய்துள்ளாராம்.
அந்த நிறுவனமும் படத்திற்கு டப்பிங் முடித்து, தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியிட தயாரானதாக கூறப்படுகிறது. இதையறிந்த யூகிசேது, தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முயன்றால், தயாரிப்பாளர் எஸ்கேப்.
இதன் காரணமாக, மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறாராம் யூகி சேது.