கூகுளில் தேடலில் தற்போது முதலாவதாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?

Must read

 

பிரியா பிரகாஷ் வாரியார் என்ற மலையாள நடிகை, தன் கண்களால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை சுட்டி இழுத்து  கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

சமூக வலைதளமான கூகுள் தேடலில் தற்போதும்  டிரென்டிங்காக  இருந்து வருவது பிரியா பிரகாஷ் வாரியார்தான்.

பாலிவுட் பிரபல நடிகைகளான சன்னி லியோன், தீபிகா படுகோனை விட அதிக அளவு தேடப்படும் நபராக பிரியா பிரகாஷ் வாரியம் திகழ்ந்து வருகிறார்…  இதற்கு காரணம் என்ன?

கடந்த 14ந்தேதி   காதலர் தினத்தை முன்னிட்டு, ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி, யூ டியூப் வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டது.

அதில் ‘மாணிக்க மலராய பூவி…’ என்ற மலையாள  மெல்லிசை பாடல் ஒரு கல்லூரி / பள்ளி விழாவில் பாடுவதுபோல படமாக்கப்பட்டு உள்ளது.

பாடல் படுபயங்கரமாக ஹிட் அடித்திருக்கிறது என்பதைவிட, அந்தப் பாடல் காட்சியில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியார்தான் ரொம்பவே பேமசாகி உள்ளார்.

இந்த பாடலில், பிரியா வாரியார்,  கண்களால் பேசிக்கொள்ளும்  காட்சிதான், ‘மாணிக்க மலராய பூவி…’ பாடலிலும் இடம்பெறுகிறது

இந்த பாடலின்போது,  சக மாணவன், தன் நண்பர்கள் குழுவுடன் மேடைக்கு அருகில் நின்று கொண்டிருக்கையில்,  மேடையில் நிகழும் இசை நிகழ்ச்சியை ஒட்டுமொத்த கல்லூரி மாணவிகளும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது காதலன் தனது கண் புருவத்தை  உயர்த்தி, நீ அழகாக இருக்கிறாய் என்று கண்ணால் பேச, அதற்கு  அந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் பிரியா வாரியார், அதே பாணியில் பதில் சொல்லும் விதமாக,  உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை இரு புருவங்களை ஒன்றன்பின் ஒன்றாக வளைத்தும், நெளித்தும், உயர்த்தியும், தாழ்த்தியும் பதில் அளிக்கிறார்அ

அந்தக்கணமே, காதலியின் இசைவு கிடைத்ததால் சந்தோஷத்தில் அந்த மாணவனின் மனமும் காற்றில் றெக்கை கட்டிப்பறக்கத் தொடங்கி விடுகிறது.

இதுபோன்ற கண் அசைவுகள்  பல படங்களில்   இடம் பெற்றிருந்தாலும், குறிப்பாக இந்தப் பாடல் காட்சியில் பிரகாஷ் வாரியாரின் கண் அசைவு இளைஞர் சமுதாயத்திடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக, இந்த  மலையாள பாடலும், அதில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியார் என்ற நடிகையின் புகைப்படமும் யூ டியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதன் காரணமாக பிரபல பாலிவுட் நடிகைகளான  சன்னி லியோன் மற்றும் தீபிகா படுகோனேவை விட அதிக அளவில்  கூகுளில்  தேடப்படுபவராக பிரியா வாரியார்  மிகவும் பிரபலமாகி விட்டார்.

பிரியா பிரகாஷ் வாரியார் நடித்துள்ள பாடலின் வீடியோ….

https://www.youtube.com/watch?v=W0fKl43QmIE

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article