கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. எப்போது படப்பிடிப்பு தொடங்கும் , அப்படித் தொடங்கினாலும் முன்பு போல் நடைபெறுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே .
இந்த ஊரடங்கு முடிந்தாலும் சமூக இடைவெளி என்பது தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் அவரது ட்விட்டர் பதிவில் :- “முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் கொரோன தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பு. திரைப்படத் துறையில் பல கோடி முதலீடு முடங்கிவிட்டது. திரைப்படங்கள் / தொலைக்காட்சித் தொடர்கள், இறுதிக்கட்டப் பணிகள் தொடர சமூக இடைவெளி முறையில் தளர்வு அளிக்கப் பரிசீலனை செய்ய வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.