பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் படங்களை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ளது

இதற்கிடையில், சூரியை வைத்து ஒருபடமும், சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

நேற்று வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்ட பல தரப்பினரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்துவந்தனர்.அது போல் ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர் எல்ரெட் குமார், வெற்றிமாறனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர் உங்கள் தயாரிப்பில் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆமாம் என்று பதிலளித்துள்ளார் எல்ரெட் குமார்.

[youtube-feed feed=1]