கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் படத் தயாரிப்பாளரான பாபா பக்ருதீன் மரணமடைந்துள்ளார்.

அரசு, சத்ரபதி போன்ற தமிழ் திரைப்படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் சூப்பர் குட் பாபு மகாராஜா என்கிற பாபா பக்ருதீன். இவர் கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 25ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாபா பக்ருதீன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாபா பக்ருதீன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தில் 25 வருடங்கள் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலி படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தவர் பாபுராஜா. இவர் கடந்த 2003ம் ஆண்டில் அரசு படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.