பெங்களூரு: கர்நாடக உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனால், சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையாவது கேள்விக்குறியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவல்துறை உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக சர்ச்சையை எழுப்பி இருந்தார். கர்நாடக சிறையில், விதிகளை முறை வெளியே சுற்றித்திரிந்த சசிகலாவின் விதிகள் மீறி செயல்களை குறித்த வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா.
தற்போது ரூபாய கர்நாடக மாநில உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டு இருப்பது சசிகலா தரப்பினரிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஏற்கனவே கர்நாடக மாநில உள்துறை செயலாளராக இருந்த உமேஷ் குமார், பொருளாதார குற்றப் புலனாய்வு துறையின் ஏ.டி.ஜி.பி.யாக பணிஇட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.