இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் மூன்றாவது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பவுடர்’.
இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிஆர்ஓ நிகில் முருகன் அறிமுகமாகிறார் .
விஜய் ஸ்ரீ ஜி தனது முதல் படத்தில் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பவுடர் படத்திற்கு ராஜா பாண்டி RP ஒளிப்பதிவு செய்கிறார். லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ளது. 2021-ம் ஆண்டு பவுடர் படம் திரைக்கு வரவுள்ளது.