டில்லி பல்கலைக் கழகத்தில் ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள்! மாணவர்கள் அதிர்ச்சி!!

டில்லி,

ல்கலைக்கழக வளாகத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது, இதன் காரணமாக மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார்  கொடுத்துள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு செயல்பட்டு வரும் கட்டிடத்தின் சுவரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதத்துக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளரான அங்கித் சங்க்வான் என்பவர், மவுரிஸ் நகர் காவல்நிலையத்தில் புகார் கூறி உள்ளார்.

அதில்ர,  சமூகப்பணி துறை கட்டட சுவர்களில் நக்சல்களுக்கு நீதி, ஆசாதி உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ள தாக  புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி காவல்துறை வடக்கு பகுதி துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.


English Summary
Pro-ISIS slogans allegedly seen in Delhi University; complaint filed