பாரிஸ்
பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டி 2019ல் பரிசுத் தொகைகள் 8% அதிகரிக்கப்பட்டுள்ளன.
வருடம் தோறும் நடைபெற்று வரும் பிரஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டி இந்த வருடம் மே 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் போட்டி ஜூன் 9 ல் நடைபெறுகிறது. அத்துடன் இந்த போட்டி நிறைவு பெறுகிறது. நேற்று இந்த போட்டியின் பரிசுத் தொகை பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில், “இந்த வருடத்துக்கான பிரஞ்ச் ஒப்பன் டென்னிஸ் போட்டிகளின் பரிசுத் தொகை 8% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெல்பவரும் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் வெல்பவரும் தலா 23 லட்சம் யூரோக்கள் (ரூ.17.95 கோடி) பரிசு பெறுவார்கள்
அத்துடன் வென்றவர் மற்றும் தோற்றவர் இடையே அதிக வித்யாசம் இல்லாமல் இருக்க முதல் சுற்றில் வெளியேறுபவர்களுக்கு பரிசுத் தொகையில் 15% உயர்வு அளிக்கப்பட்டு 46000 யூரோ (ரூ.36 லட்சம்) ஆக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி முதல் சுற்றுக்கு தகுதி பெறாத வீரர்களுக்கு பரிசுத் தொகை 24000 யூரோக்கள் (ரூ.18.7 லட்சம்) ஆக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு எஸ் ஒப்பன் டென்னிஸ் விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு $ 3.8 மில்லியன் அதாவது ரூ. 26.06 கோடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.