சுனார்:
பிரியங்காவின் அதிரடி தர்ணா போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமான நிலையில், தற்போது அவர் சோன்பாத் செல்ல காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. பிரியங்காவின் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக யோகி அரசு பணிந்துள்ளது.

சோன்பத்ராவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்து, சுனார் விருந்தினர் மாளிகையில் சிறை வைத்திருந்தனர்.
காவல்துறை அனுமதி மறுப்பை கண்டித்து, நேற்று முதல், நள்ளிரவு தொடர்ந்து இன்று மதியம் வரை அவர் தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தி னரை சந்திக்காமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாகவும் தெரிவித்த பிரியங்கா காந்தி பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி யினர் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், சுனார் வந்து பிரியங்காவை சந்தித்து பேசினர். பாதிக்கப்பட்ட 10 பேரின் குடும்பத்தையும் சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசி, அரவணைத்து ஆறுதல் கூறினார்.
இதன் காரணமாக பயந்துபோன மாநில அரசு, தனது பிடிவாதத்தை தளர்த்தி உள்ளது. பிரியங்கா காந்தி வெளியே செல்ல காவல்துறை யினர் அனுமதி வழங்கி உள்ளனர். அவர் மாநிலத்தில் எங்கும் செல்லலாம் என்று தெரிவித்து உள்ளது
இது பிரியங்கா காந்தியின் தைரியத்துக்கும், இரக்கத்துக்கும் கிடைத்த வெற்றி.
[youtube-feed feed=1]